galaxy Space Telescope Science Institute Office of Public Outreach
டெக்

அறிவோம் அறிவியல் 3|அனைத்து கேலக்ஸியும் எப்படிஒரே பாதையில் சுற்றுகிறது? பிரபஞ்சத்தின் மையப்பகுதி எது?

பிரபஞ்சத்தின் மையப்பகுதி எது? கேலக்ஸி சுழற்சியின் ரகசியம்

Jayashree A

சென்ற வாரம் கருந்துளை பற்றி பார்த்தோம் அல்லவா? இதில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம்.

இந்த கேலக்ஸி (விண்மீன் மண்டலம்) என்பது பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், தூசுகள் வாயுக்கள் என்று எண்ணற்றவையை கொண்டிருக்கும். அதேபோல் நம் கேலக்ஸியைப் போல பல கேலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உள்ளன. ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவில் ஏதோ ஒன்று ஒரு மையப்புள்ளியாக இருக்கிறது. அது கருந்துளையாக இருக்கலாம். அல்லது பல கேலக்ஸிகள் ஒன்றாக இணைந்து ஒரு பொருளாகவும் இருக்கலாம்.

அடர்த்தி மற்றும் ஈர்ப்பு விசை

அதாவது, பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவானது பூமியை சுற்றி வருகிறது. இதில் பூமியின் அடர்த்தி அதிகம். இதனால் நிலவு பூமியை சுற்றுகிறது. இதே நிலவின் அடர்த்தி அதிகமாக இருந்தால் பூமி நிலவினை சுற்றி இருக்கும். இதே போல் தான் ஒவ்வொரு கிரகங்களும் அடர்த்தி+ஈர்ப்பு விசையின் அடிப்படையில் ஒன்று மற்ற கிரகங்களை சுற்றி வருகின்றன.

அதே போல் சூரியனின் அடர்த்தி மற்றும் ஈர்ப்பு சக்தியால் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. அதே போல் நமது கேலக்ஸியில் இருக்கும் எண்ணற்ற கோள்கள் ஈர்ப்பு விசையால் ஒவ்வொன்றும் ஒன்றை அடிப்படியாகக் கொண்டு சுற்றி வருகிறது. அதே போல் பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் இருக்கிறதல்லவா அவை அனைத்தும் ஏதோ ஒன்றை மையமாகக்கொண்டு சுற்றி வருகிறது. அப்படியானால் அந்த மையப்பகுதி எல்லா கேலக்ஸியை விடவும் அடர்த்திமிகுதியாக இருத்தல் வேண்டும் அல்லவா? அப்படியென்றால் இந்த பிரபஞ்சத்தின் மையப்பகுதி எது?

அதாவது ஒரு பம்பரத்தின் மேல் தட்டுதான் பிரபஞ்சம் அதில் எண்ணற்ற கேலக்ஸி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது பம்பரம் சுழலும் பொழுது, பம்பரத்தின் கீழிருக்கும் ஆணிதான் பிரபஞ்சத்தின் ஆணிவேர். ஆணிவேர் சுழல்வதால் தான் மேலிருக்கும் பிரபஞ்சம் சுழல்கிறது.

கேலக்ஸி எதை மையமாக வைத்து பிரபஞ்சத்தில் சுற்றி வருகிறது?

சூரியனின் அடர்த்தி மற்றும் ஈர்ப்பு சக்தியால் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. அதே போல் நமது கேலக்ஸியில் இருக்கும் எண்ணற்ற கோள்கள் ஈர்ப்பு விசையால் ஒவ்வொன்றும் ஒன்றை அடிப்படியாகக் கொண்டு சுற்றி வருகிறது. அதே போல் பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் இருக்கிறதல்லவா அவை அனைத்தும் ஏதோ ஒன்றை மையமாகக்கொண்டு சுற்றி வருகிறது.

அப்படியென்றால் ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவில் இருக்கும் கருந்துளை? நமக்கு இப்படி ஒரு சந்தேகம் வரும். அதே போல், ஒரு கேலக்ஸியின் நடுவில்தான் கருந்துளை இருக்கவேண்டும் என்பதும் அவசியமில்லை. ஏனெனில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்த ஒரு நட்சத்திரம்தான் கருந்துளையாக உருமாறியுள்ளது. அப்படியிருக்கும் பொழுது கருந்துளையை மையமாகக் கொண்டு எப்படி கேலக்ஸி சுற்றமுடியும்? இந்த சந்தேகம் எனக்கும் எழுகின்றது.

அதே போல் ஒரு கேலக்ஸியில் இருக்கும் கோள்களும் நட்சத்திரங்களும் அதன் பாதையிலிருந்து தவறாமல் இருக்க, ஈர்ப்பு சக்தி இருப்பதைப்போல, பல கேலக்ஸியும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருக்க் ஈர்ப்பு விசை இருக்கவேண்டும். அதனால்தான் அது அது அதன் பாதை மாறாமல் பிரபஞ்சத்தை சுற்றி வருகிறது.

ஆக... இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கோள்களும் கேலக்ஸிகளும் ஈர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டே சுழல்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

அடுத்ததாக நட்சத்திரங்களின் வண்ணங்களை கொண்டு அதன் வயதை பார்க்கலாம்.

வெள்ளை நட்சத்திரம்:

சில நட்சத்திரங்கள் ஒளிர்வது குறைந்து பார்ப்பதற்கு வெண்மை நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம், அதன் அணுவில் இருக்கும் எரிபொருள்களை முற்றிலும் எரித்து தீர்த்துவிட்டு அளவில் சுருங்கி, குளிர்ந்து இருக்கும். இதன் குளிர்ச்சியை கணக்கிட்டு இதன் வயதை தெரிந்து கொள்ளலாம். இத்தகைய நட்சத்திரத்திற்கு ஆய்வாளார்கள் வெள்ளை குள்ளர்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும், கதிரியக்க ஐசோடோப்புகள், லித்தியத்தின் அளவினைக் கொண்டு நட்சத்திரத்தின் வயதைத் தெரிந்து கொள்ளலாம்.

நீல நட்சத்திரங்கள்:

இவை வெப்பமாகவும் அளவில் பெரிய நட்சத்திரமாகவும் இருக்கும். இவை குறுகிய ஆயுட்காலம் கொண்டது. அதாவது சில மில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும், இவ்வகை நட்சத்திரங்கள் கண்கவர் சூப்பர்நோவா வெடிப்புகள் மூலம் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

மஞ்சள் நட்சத்திரங்கள்:

இவை நமது சூரியனைப் போன்றவை. இது நீலம் மற்றும் வெள்ளை நட்சத்திரங்களை விட குளிர்ச்சியானவை. குறைவான எடை கொண்டவை. நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பொதுவாக சுமார் 10 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

ஆரஞ்சு நட்சத்திரங்கள்:

மஞ்சள் நிற நட்சத்திரங்களை விட ஆரஞ்சு நட்சத்திரங்கள் குளிர்ச்சியானவை மற்றும் குறைவான எடை கொண்டவை. நீண்ட ஆயுட்காலம் கொண்டவை. பொதுவாக சுமார் 20-30 பில்லியன் ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது.

சிவப்பு நட்சத்திரங்கள்:

இவை குளிர்ச்சியான நட்சத்திரங்கள். அவை மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டவை, நூற்றுக்கணக்கான பில்லியன் ஆண்டுகள் வரை, மேலும் விண்மீன் மண்டலத்தில் மிகவும் பொதுவான வகை நட்சத்திரங்களாகும்.

சரி.. இனி நீங்கள் வானத்தில் நட்சத்திரத்தை பார்க்கும் பொழுது அதன் நிறத்தை கொண்டு அதன் வயதை தெரிந்துக்கொள்வீர்கள் தானே!