சுனிதா வில்லியம்ஸ் முகநூல்
டெக்

மூன்றாவது முறை விண்வெளி பயணத்தை தொடங்கினார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

PT WEB

போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் சக நாசா விண்வெளி வீரரும், அமெரிக்க கடற்படை முன்னாள் கேப்டனுமான புட்ச் வில்மோருடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார்.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் வி ராக்கெட் மூலம் இருவரும் விண்வெளி பயணத்தை நேற்று மேற்கொண்டனர். 25 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவாரம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின், 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிக்கரமாக பயணித்துள்ளார். ஏற்கனவே 2006, 2012ஆம் ஆண்டுகள் என 2 முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மொத்தம் 322 நாட்கள் தங்கியிருந்த சூழலில், தற்போது 3ஆவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.