ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்கள் உலகம் முழுவதுமுள்ள சந்தையில் படு ஜோராக விற்பனையாகி வருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் 12.9 மில்லியன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE மாடல்கள் விற்பனையாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலக ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் மந்தம் இருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் மட்டும் கடந்த ஆண்டில் 19 சதவிகிதம் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் கடந்த 2020 நான்காவது காலாண்டில் விற்பனையான ஸ்மார்ட்வாட்ச்களில் 40 சதவிகிதம் ஆப்பிள் வாட்ச்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்கள் அதிகளவில் விற்பனையாக காரணம் அந்த நிறுவனம் களம் இறக்கிய பிளாக்ஷிப் தயாரிப்புகள்தான் என தெரியவந்துள்ளது. சந்தையில் ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹுவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்கள் தான் அதிகம் விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.