அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐஃபோன் 16, ஐஃபோன் 16 பிளஸ், புரோ மற்றும் புரோ மேக்ஸ் என 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
6.3 இன்ச் டிஸ்பிளே முதல் 6.9 இன்ச் டிஸ்பிளே, இருட்டில் திரையில் மிக குறைந்த வெளிச்சம், வேகமான சார்ஜிங் அம்சம், அதிநவீன கேமரா வசதி, மேம்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் ஐஃபோன் 16 ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஐஃபோன் 16 சீரிசின்
அடிப்படை மாடல் 79,990 ரூபாயும்,
பிளஸ் மாடல் 89, 990 ரூபாயும்,
புரோ மாடல் 1,19,900 ரூபாயும்,
புரோ மேக்ஸ் மாடல் 1,44, 900 ரூபாய்
என இந்திய சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு வரும் 13ஆம் தேதி தொடங்கும் எனவும், 20 ஆம் தேதி முதல் ஐஃபோன் 16 சிரிஸ் ஃபோன்கள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஏர்போட்டையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐஃபோன் 16 சீரிஸ் செல்போன்களை இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.