apple web
டெக்

விதிமீறல்களில் ஈடுபட்ட ஆப்பிள் நிறுவனம்.. சமர்பிக்கப்பட்ட 150 பக்க அறிக்கை! என்ன நடந்தது?

PT WEB

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், app-developer-களுடன் விதிகளை மீறி ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களை 2021ஆம் ஆண்டு முதல் விசாரித்து வந்த இந்திய வர்த்தகப்போட்டி உறுதி ஆணையம், 150 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

வேறு எந்த நிறுவனத்திடமும் வர்த்தகம் செய்யக்கூடாது..

அதன்படி, ஆப்-டெவலப்பர்கள் ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்யக்கூடாது என கட்டாயப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதே போன்று, அவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பேமெண்ட் மற்றும் பில்லிங் சிஸ்டத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டத்திற்கு புறம்பாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம்

இதன் மூலம், சந்தையில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டதுடன், லட்சக்கணக்கான ஆப்-டெவலப்பர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் இந்திய வர்த்தகப்போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் மீது அபராதமும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.