டெக்

ஆண்ட்ராய்டு துணையுடன் மீண்டும் களமிறங்கும் நோக்கியா... 4 ஜிபி ரேம் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஆண்ட்ராய்டு துணையுடன் மீண்டும் களமிறங்கும் நோக்கியா... 4 ஜிபி ரேம் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

webteam

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

செல்போன் விற்பனையில் முன்னணியில் இருந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்துடன் வெளிவந்துகொண்டிருந்தது. ஆனால், இது வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், செல்போன் உற்பத்தி சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நோக்கியா பிராண்ட் பெயரில் ஸ்மார்ட்போன்களைத் தாயாரிக்கும் உரிமையை பின்லாந்தைச் சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் பெற்றது. எச்எம்டி குளோபல் நிறுவனத்தால் நோக்கியா பிராண்ட் பெயரில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மாட்ர் போனாக நோக்கியா 6 ஸ்மார்ட் போன் தற்போது வெளியாக இருக்கிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மாட்ர்ட் போன் விரைவில் இந்தியாவுக்கும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரும் இந்த போனின் விலை சுமார் ரூ. 16,750 இருக்கும் என்று தெரிகிறது.

‘நோக்கியா 6’ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

5.5 இன்ச் ஃபுள் ஹெச்டி டிஸ்ப்ளே.

4 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டது.

ஆண்ட்ராய்டு 7.0 நவ்காட் இயங்குதளத்தில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 மெகா பிக்ஸல் பின்பக்க கேமிரா மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமிரா கொண்டது.

3,000 ஆம்பியர் பேட்டரி பவர் கொண்டது.