blue origin என்று சொல்லக்கூடிய தனியார் ராக்கெட் மூலமாக இந்தியாவைச் சார்ந்த கோபிதோட்டகுரா என்னும் விமானி விண்வெளிக்கு செல்ல இருக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இவருடன் வேறு யார் யார் செல்கிறார்கள்? விண்வெளி சுற்றுலா என்பது என்ன? என்பதை பற்றி நம்மிடம் விளக்குகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
"இந்த வாரம் blue origin என்ற தனியார் நிறுவனம் NS25 (New Shepard) என்ற ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு 6 பேரை அனுப்ப உள்ளது. அவர்கள், mason angel, sylvain chiron, ed owight, ken hess, carol schaller, gopi thotakura ஆகியோர்.
இதில் எட் ஒய்ட் என்பவர் 1961ல் நாசாவின் மூலமாக விண்வெளிக்கு செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றவர், ஆனால் சில காரணங்களுக்காக அவர் விண்வெளிக்கு செல்லவில்லை. ஆனால் அவரை blue origin விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது."
”2000 ஆண்டில் Space tourisium என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். இவர் அதற்கு அடுத்தகட்டமாக ப்ளூ ஆரிஜினின் NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கி, மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளார்."
முன்னதாக இந்த நிறுவனம் 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் NS22 என்ற ஒரு விண்கலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்த சமயத்தில் அதில் ஒரு சிக்கல் வந்தது. ஆகையால் மனிதர்களை தவிர்த்து, வெறும் பொருட்களை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த பயணம் தடைப்பட்ட காரணத்தால் அமெரிக்கா அரசாங்கம் பல தீவிர விசாரணைக்கு பிறகு NS25 விண்கலத்தை தற்பொழுது அனுமதித்து இருக்கிறது.
இந்த NS25 ராக்கெட்டில் என்ன ஸ்பெஷல் என்றால் இது இரண்டு கட்ட ராக்கெட். இதன் கீழ்பகுதியில் இருப்பது ஒரு உந்து ராக்கெட். மேல்பகுதியில் பயணிகள் இருக்கும் ராக்கெட். ராக்கெட் பூமியிலிருந்து கிளம்பி விண்கலத்தை விண்ணில் அனுப்ப உந்து சக்தியாக விளங்கக்கூடியது கீழிருக்கும் உந்து ராக்கெட்.
புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு கல்லை மேல் நோக்கி எரிகிறோம் என்றால் அக்கல்லானது குறிப்பிட்ட தூரம் வரையில் மேல் நோக்கி சென்று பிறகு கீழே விழும், கல் பயணிக்கும் பாதையை பரவளையப்பாதை என்று கூறுவர். அதேபோல், பூமியிலிருந்து உந்து ராக்கெட்டானது கர்மென் எல்லை வரை பயணிக்கும். பிறகு கீழே வந்துவிடும்.
காமென் எல்லையைக் கடந்தால், விண்வெளி. அவ்வளவுதான். இந்த விண்வெளி பயணத்திற்கு அதிகபட்சமாக இருபது நிமிடங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கார்மென் எல்லையைக் கடந்து ஒரு 100 கிலோமீட்டர் உயரத்தில் பயணிகள் 4 நிமிடம் மிதக்கும் அனுபவத்தை பெறலாம். (அதாவது எடையில்லாத ஒரு நிலை) 4 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த விண்கலம் பாராசூட் மூலம் தரையிறக்கப்படும்.
ஏவக்கூடிய ராக்கெட்டும், பாராசூட் மூலம் திரும்பிவரும் விண்கலமும் மறுபயன்பாட்டிற்கு பயன்படும் என்கின்றனர்.
gopi thotakura முன்னதாக சந்தோஷ் ஜார்ஜ் குலகரா என்ற திரைப்பட தயாரிப்பாளார் வர்ஜின் கேலட்டிக் என்ற மற்றொருவர் தனியார் ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு செல்ல பயிற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்முறைக்கு வரவில்லை.
வர்ஜின் கேலட்டிக் என்ற நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவிற்கு பயணிகளை அனுப்பும் ஒரு நிறுவனம் என்றாலும், அதன் செயல்பாடு வேறு. அதாவது இரண்டு விமானங்களுக்கு நடுவில் விண்கலத்தை வைத்து விண்வெளிக்கு அனுப்பும் முறை கையாளப்படுகிறது. அதே போல் கர்மென் எல்லையைக்கடந்து வெறும் 80 கிலோமீட்டர் உயரம் வரை தான் அது பயணிக்கும். கார்மென் பகுதியை தாண்டி 80 கிலோ மீட்டர் பயணித்தாலே விண்வெளி என்கிறது நாசா. ஆனால் மற்ற நாடுகள் கார்மென் பகுதியிலிருந்து 100 கிமீ தாண்டினால்தான் விண்வெளி என்கிறது.
இதெல்லாம் விட முதன்முதலில் ராக்கேஷ் ஷர்மா என்ற விண்வெளி வீரர்தான் முதன்முதலில் விண்வெளிக்கு பயணித்தார். 1984ல் சோவியத் யூனியன் சோயூஸ் டி 11 சல்யூ 7 என்று சொல்லக்கூடிய விண்வெளி நிலையத்திற்கு சென்றார். இந்த விண்வெளி நிலையம் கர்மென் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். அங்கு தங்கி அவர் 7 நாட்கள் வரை ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
விண்வெளிக்கு செல்வதற்கு ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டால், கிட்டத்தட்ட1,00,000 லிருந்து 2,00,000 டாலர் வரை ஆகும் என்ற பேச்சு அடிபடுகிறது” என்கிறார்