சூரியபுயல் PT
டெக்

பூமியை தாக்கிய காந்த புயல்.. அதிர்ச்சியூட்டும் படங்கள்! எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு தெரியுமா?

Jayashree A

2024-2025 வருடத்தை விஞ்ஞானிகள் சோலார் சைக்கிள் என்று அழைக்கிறார்கள்.

காரணம், 11 வருடத்திற்கு ஒருமுறை சூரியனின் சக்தியானது அதிகரித்துக் காணப்படும். அதாவது சூரியனிலிருந்து வரும் வெப்ப கதிர்களின் (காந்தப்புயல், சூரிய புயல், மின்காந்தபுயல்) தாக்கமானது வலுவானதாக இருக்கும். இந்த சமயத்தில் சூரியனை தொலைநோக்கியின் வாயிலாகவோ அல்லது சூரிய வடிகட்டிகளின் மூலம் பார்க்கும் பொழுது அதில் சில கரும்புள்ளிகள் தென்படும் இதை விஞ்ஞானிகள் star parts என்கின்றனர்.

இந்த star parts ஐ ஆய்வு செய்வதற்காகவும் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலமும், நாசாவின் பார்க்கர் சோலார் ப்ராப் (Parker Solar Probe) அனுப்பப்பட்டுள்ளது. இவை சூரியனிலிருந்து வெளிவரும் காந்தபுயலை ஆய்வு செய்வதுடன் அது பூமிக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராயும். சூரியனிலிருந்து காந்த புயல் அதிகரிக்கும்பொழுது பூமியில் இருக்கும் எலட்ரானிக் மின் சாதனங்கள் பழுதுபட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதன்படி கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூரிய புயலிலிருந்து வெளிப்பட்ட மின்காந்த அலையின் தாக்கம் அதிகரித்ததன் விளைவாக, பூமியின் வடகரை மற்றும் தென்கரை கோளத்தில் பல நாடுகளில் அரோரா எனபடும் ஒளிக்கீச்சுகள் தெரிந்தன.

சூரியனிலிருந்து மே 9ம் தேதி முதல் சூரியனிலிருந்து காந்த புயல் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. மே 10, 2024 அன்று அதிகாலை 2:54 மணிக்கு சூரியன் ஒரு வலுவான சூரிய புயல் ஒன்றும் உற்பத்தியானதாகவும் அது இந்தவாரம் இறுதிவரை நீடிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரிய புயலால் துருவ பகுதியில் இருக்கும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அரோரா எனப்படும் ஒலிக்கிச்சுகளின் புகைப்படங்கள்

அரோரா