டெக்

விரைவில் சந்தைக்கு வரவுள்ள இதயத் துடிப்பை அறிந்துக்கொள்ள உதவும் கைகடிகாரம்

விரைவில் சந்தைக்கு வரவுள்ள இதயத் துடிப்பை அறிந்துக்கொள்ள உதவும் கைகடிகாரம்

webteam

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மனிதனின் இதயத்துடிப்பை கணக்கிடும் கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது.

கடிகாரம் என்பது மணி பார்க்கத்தான். ஆனால் தற்போது கைக்கடிகாரங்களில் என்னென்னவோ வந்து விட்டன. செல்போன்களுடன் இணைக்கப்பட்டு கை கடிகாரமே ஒரு செல்போனை போலவும் பயன்படுகிறது. 

இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டும் உடல் ஆரோக்யம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இசிஜி வசதி கொண்ட புதிய வகை கைகடிகாரத்தை உருவாக்கியுள்ளது. மனிதனின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் இ.சி.ஜி. எனப்படும் எலக்ட்ரோ கார்டியாயோ கிராஃபி தொழில்நுட்ப வசதி இந்த கைக்கடிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்தக்கடிகாரம் குறித்து 2 வருடத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான கடிகாரமாக இருக்காது என்றும், இதயத்துடிப்பை பற்றி அறிதல், தகவல்களை சேமித்தம், பகிர்தல் போன்ற வசதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் கடிகாரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். 

பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கும் அதுவரை கை கடிகாரம் மக்கள் பயன்பாட்டுக்கு வராது. இந்நிலையில் பயன்படுத்த பாதுகாப்பான கருவி என்ற முறையில் இந்த கை கடிகாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விரைவில் சந்தையில் விற்பனையாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் இசிஜி வசதி கொண்ட கைகடிகாரங்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.