டெக்

மும்பையில் அறிமுகமான ஏர்டெல் வோல்ட்-இ சேவை

மும்பையில் அறிமுகமான ஏர்டெல் வோல்ட்-இ சேவை

webteam

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக வோல்ட் இ சேவைகளை முதற்கட்டமாக மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைகக்கு பின்னர் ஏர்டெல், வோடபோன், உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்யைாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்களை வோல்ட் இ-யின் கீழ் முதற்கட்டமாக மும்பையில்  அறிவித்துள்ளது. 

இதன்மூலம், 4ஜி வேகத்தில் வாடிக்யைாளர்கள் ஹெச்.டி.தரத்தில் வாய்ஸ் கால்களை மேற்கொள்ளலாம்.  ஏர்டெல் 4 ஜி சிம் கொண்ட 4G / LTE-எனாபில்ட் மொபைல் சாதனங்களில் ஏர்டெல் வோல்ட்-இ சேவை கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் வோல்ட்-இ -ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் எந்தவொரு மொபைல், லேண்ட்லைன் நெட்வொர்க்கையும் அழைக்கலாம். இதற்காக கூடுதல் கட்டணங்கள் இருக்காது என்றும், ஏற்கனவே இருக்கும் திட்டத்தின்படி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.