எங்கெங்கு காணினும் இனிமையடா என்பது மாறி, இணையமடா என்று சொல்லும் அளவுக்கு நம்ம ஊரில நெட்வொர்க் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றது. அந்த அளவிற்கு பிறந்து சில மாதங்களேயான குழந்தை தொடங்கி, தள்ளாடும் வயதிலுள்ள முதியவர் வரை எல்லோருக்குமானதாக இருக்கிறது இணையம். நம்முடைய பல தேவைகளையும் பல மடங்கு குறைத்திருக்கிறது என்பதே, இணைய நிறுவனங்களோட அசுர வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Super Market, Hospital, Ticket Counter, EB Bill, வீட்டு வாடகை, லோன்… என எங்கும் எதிலும் இப்போ இந்த இண்டர்நெட் வந்தாச்சு. `இனி இண்டர்நெட் இல்லாம, நம்மால எதுவுமே பண்ண முடியாது; அப்படி ஒருவேளை இண்டர்நெட் இல்லாத உலகத்துக்கு நாம போன… நாமதான் பின்னோக்கி போறோம்னு ஆகிடும்’ என்ற நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம்.
அதனாலேயே என்னவோ, இன்று இருக்கும் எல்லா சந்தைகளையும்விட, இண்டெர்நெட்டுக்கான சந்தைதான் மிகப்பெரியதாக இருக்கிறது. அதிலும் யார் அதிகமான ஆஃபர்ஸை கொடுக்கிறாங்க என்பதைவிடவும், யார் வேகமான இண்டெர்நெட்டை கொடுக்கிறார்கள் என்பதையே மக்கள் அதிகம் பார்ப்பதுண்டு. இந்த பந்தயத்தில், ஏர்டெல் நிறுவனம் ஒவ்வொருமுறையும் தங்களை தகவமைச்சுக்க புதிது புதிதாக சில விஷயங்களை செய்வதுண்டு. அப்படியான ஒரு புது முயற்சிதான், ஏர்டெல் 5ஜி!
இந்த ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க், 4ஜியை விட 20 ல் இருந்து 30 மடங்கு வேகம் அதிகளவில் இருப்பதாக ஏர்டெல் அலுவலகத்தில் செயல்முறை விளக்கமாக நேற்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால என்ன பயன் என்றால், இப்போ ஒரு படத்தை டவுன்லோடு செய்ய ஒருவருக்கு4 G ல பண்ணினா 15-17 நிமிஷங்கள் ஆகுமென்றால், 5 G ல் அதே படத்தை வெறும் 30 வினாடிகளில் டவுன்லோட் செய்ய முடியும்.
இந்தியாவில டெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத், சென்னை, சிலிகுரி, வாரணாசி, குருகிராம், நாக்பூர், பானிபட், கவுகாத்தி, பாட்னா என 12 நகரங்கள்ல ஏர்டெல் 5ஜி சேவை துவங்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னையில மட்டும் பெசன்ட் நகர், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் ஆகிய 12 இடங்கள்ல 5g சேவை வழங்கப்படுவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
5ஜி சேவையின் தகவல்களை சென்னையில உள்ள அனைத்து ஏர்டெல் கிளைகளிலும் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவையானது தமிழகம் முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
இதுகுறித்து ஏர்டெல் தரப்பில், “இந்த 5ஜி சேவையை சாம்சங், ஒன் பிளஸ், ஓப்போ, விவோ, ரியல்மீ, ஜியோமி, ஐகியூஓஓ (IQOO), மோட்டோரோலா (motorola), நோக்கியா, லவா (Lava), டெக்னோ (Tecno), இன்ஃபிநிக்ஸ் (Infinix) என எந்தவகை ஃபோன் வச்சிருக்கவங்களும் பெறலாம்! உங்ககிட்ட 5ஜி போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் இருந்தா மட்டும் போதும்! கூடவே இப்போ இருக்க ஏர்டெல் 4ஜி-சிம் 5ஜியா மாத்திக்கிட்டா போதும். இருக்கும் 4ஜி சிம் கார்டை, சர்வீஸ் செண்டரில் 5ஜியாக மாற்றிக்கொண்டு, பின் மொபைலில் செட்டிங்க்ஸில் மாற்றினால் போதும்! இந்த சேவையை பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.