A350 first look x
டெக்

அசத்தும் புதிய தோற்றத்தில் ஏர் இண்டியா விமானம்!

ஏர் இண்டியா நிறுவனத்தின் உரிமம் டாடா நிறுவனத்திற்கு சென்றதை அடுத்து லோகோ மட்டுமல்ல தற்போது அவ்விமானத்தின் புதிய தோற்றத்தினையும் மாற்றியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஏர் இண்டியா நிறுவனத்தின் உரிமம் டாடா நிறுவனத்திற்கு சென்றதை அடுத்து லோகோ மட்டுமல்ல தற்போது அவ்விமானத்தின் தோற்றத்தினையும் மாற்றியுள்ளது.

ஜனவரி 2022 அன்று டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதை அடுத்து அந்த விமானத்தின் லோகோ, டிசைன் என்று அனைத்தும் ஒவ்வொன்றாக மாற்றி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்களது விமானத்தின் சமீபத்திய புதிய தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது ஏர் இண்டியா.

இது குறித்து தனது x வலைதளப்பக்கத்தில் ஏர் இண்டியா கூறுகையில், "துலூஸில் உள்ள பெயிண்ட் ஷாப்பில் தாயாரான எங்களது புதிய கம்பீரமான A350 இன் முதல் தோற்றம் இதோ. குளிர்காலத்தில் எங்கள் A350கள் உங்கள் வீட்டிற்கு வரத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

வால் பகுதியில் அவுட்லைனில் ஆரஞ்ச் நிற கோடுடன் சிவப்பு, தங்க நிறம், மற்றும் ஊதா நிறத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. ஜன்னல்களுக்கு அருகில் மேல் மூலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரானது பொரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் விமானம், ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு உள்நாட்டு வழித்தடங்களில் இயக்கப்படும். AI குழுவினரின் இந்த A 350 விமானிகளின் மூலமாக தேவையான பயிற்றியை பெறுவர். பிறகு அதிக தூரமான பகுதிகளுக்கு பயன்படுத்தபடுவதற்கு முன்பு, அருகிலுள்ள சர்வேத விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.