டெக்

மொபை‌ல்‌-ஆதார் எண்களை இணைக்க புதியமுறை

webteam

மொபைல் ஃபோன் எண்களுடன் ஆதார் எண்ணை ‌இணைப்பதற்கான புதிய நடைமுறைகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளன. 

மொபல் ஃபோன் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் என்று சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது சிம் நிறுவனங்கள் மற்றும் ரிசார்ஜ் கடைகளுக்கு சென்று தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். 

இந்நிலையில் மொபைல் எண் - ஆதார் எண் இணைப்புக்காக தொலைபேசி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 3 புதிய வழிமுறைகளுக்கு தேசிய அடையாள அட்டை ஆணைய‌ம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒருமுறை பாஸ்வேர்டு ஆப் எனப்படும் செயலி முறை, ஐவிஆர்எஸ் எனப்படும் குரல் பதிவுச் சேவை முறை என 3 வழிகளில் ஆதார் - மொபைல் எண் இணைப்பை செயல்படுத்தலாம் என தொலைபேசி நிறுவனங்கள் ஆலோசனை தெரிவித்திருந்தன. மொபைல் எண்களை ஆதாருடன் வரும் பிப்ரவ‌ரி ‌6-ம் தேதிக்குள் இணைக்க‌வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவன‌ங்‌களுக்கு ‌அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த புதிய முறை டிசம்பர் 1ஆம் தேதி முறை நடைமுறைக்கு வரவுள்ளது.