WOH G64  கூகுள்
டெக்

பால்வீதிக்கு வெளியே சூப்பர் நோவாவுக்கு தயாராகும் நட்சத்திரம்.. சூரியனை விட 2,000 மடங்கு பெரியது!

நமது பால்வெளிக்கு வெளியே சூப்பர் நோவா நிகழ்வுக்காக தயாராகும் WOH G64 என்ற விண்மீன் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Jayashree A

நமது பால்வெளிக்கு வெளியே சூப்பர் நோவா நிகழ்வுக்காக தயாராகும் WOH G64 என்ற விண்மீன் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் முன்பே கூறியது போல்.. சூப்பர் நோவாவாக மாற இருக்கும் ஒரு நட்சத்திரம் தனது எரிப்பொருளை தீர்த்ததும், பல மடங்காக விரிந்து பெரியதாகும். அதேபோல் பலமடங்கு வேகமாக சுழலும். அப்படி வேகமாக சுழலும் பொழுது அருகில் இருக்கும் கோள்களை விழுங்கி வாயு மற்றும் தூசிகளை வெளியேற்றும். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த நட்சத்திரமானது வெடித்து சூப்பர் நோவாக மாறும்.

இப்படி சூப்பர் நோவாக மாறுவதற்கு முன்பு இருக்கும் நிலை அதாவது எரிப்பொருளை எரித்துவிட்டு வாயு மற்றும் தூசியை வெளியேற்றிக்கொண்டு, வெடிப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு WOH G64 என்ற விண்மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த நட்சத்திரமானது நமது பால்வெளிக்கு வெளியே சுமார் 160,000 ஒளி ஆண்டு தொலைவில் மாகெல்லானிக் கிளவுட்டில் என்ற விண்மீன் மண்டலத்தில் இருக்கிறது என்றும் இந்த நட்சத்திரம் நமது சூரியனைவிட 2000 மடங்கு பெரியதாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நட்சத்திரத்தை "பெஹிமோத் நட்சத்திரம்" என்றும் கூறுகிறார்கள். இதை ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப்பெரிய தொலைநோக்கியான இண்டர்ஃபெரோமீட்டரை (விஎல்டிஐ) பயன்படுத்தி, சிலியில் உள்ள யுனிவர்சிடாட் ஆண்ட்ரெஸ் பெல்லோவைச் சேர்ந்த கெய்ச்சி ஓனகா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெளிவில்லாத இந்த படத்தில் ஒரு முட்டை வடிவ கொக்கூன் நட்சத்திரத்தை நெருக்கமகச் சூழ்ந்துள்ளது தெரிகிறது. கடந்த பத்து வருடங்களில் தூசி குப்பைகளால் மெல்லமெல்ல மங்கி வருகிறது என்றும் அடுத்த பத்து வருடங்களில் மேலும் இந்நட்சத்திரம் மங்கலாம் என்றும் கூறுகிறார்கள்.