நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் வாயு புதிய தலைமுறை
டெக்

விண்ணில் உருவாகும் புதிய கோள்கள்; விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய James Webb-ன் லேட்டஸ்ட் தகவல்!

விண்ணில் உருவாகிறது புதிய கோள்; விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜேம்ஸ் வெப்பின் புதிய தகவல்!

Jayashree A

இரட்டை நட்சத்திரம் புதிய கோள்களை உருவாக்குகிறதா?

சமீபத்தில் நாசா ஒரு செய்தியை பகிர்ந்துள்ளது. அதாவது, நாசாவின் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி இரட்டை நட்சத்திரத்தின் செயல்பாடு குறித்த ஒரு அரிய தகவலை நமக்கு தந்துள்ளது.

விண்வெளி ஆராய்சியாளர்கள் நீண்டகாலமாக WL20 என்ற பெயர் சூட்டப்பட்ட இளவயது நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த நட்சத்திரத்தின் ஆய்வானது இன்று நேற்று அல்ல... கிட்டத்தட்ட 1970 முதல், அடுத்தடுத்து வந்த ஐந்து வகையான தொலைநோக்கியின் உதவியினால் இதனை ஆராய்ந்து வந்தனர். ஆனால் தற்பொழுது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி MIRI உதவியால் (webbs mid infrared instrument) இந்த WL20 நட்சத்திரத்தைப் பற்றி ஒரு அரிய தகவலை தந்துள்ளது.

நாசாவின் உருவகப்படம்

WL20 நட்சத்திரமானது சுமார் 2 மில்லியன் முதல் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு ஜோடி நட்சத்திரம் (twin star)

தற்பொழுது, இந்த ஜோடி நட்சத்திரமானது ஒன்றாக ஒரே சமயத்தில் (தெற்கு வடக்காக) அதினிலிருந்த வாயுவை வெளியேற்றியுள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த நிகழ்வு ஆராய்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாயுக்கள் ஒன்று போலவும், ஒரே திசையிலும் வெளியிட்டதையும் ஜெம்ஸ் வெப் MIRI படம் பிடித்துள்ளது.

மேலும் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் வாயுக்களில் உள்ள தூசிகள், துகள்கள், கார்பன்மோனாக்சைடு போன்ற வாயுகள், அனைத்தும் அந்த நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே... இவ்விரு நட்சத்திரங்களில் கோள்கள் உருவாகலாம் என்றும் ஆராய்சியாளார்கள் கூறுகின்றனர்.

பல தொலை நோக்கியின் ஆராய்ச்சி

இத்தகைய நிகழ்வுக்கு பிறகு இந்த இரு இளம் நட்சத்திரங்களானது தற்பொழுது சற்று வளர்ச்சிக்கண்டு பருவநிலையை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இன்னும் விண்ணில் இருக்கும் பலப்பல அதிசயங்களை ஜேம்ஸ் வெப் போன்ற அதி நவீன தொலை நோக்கியின் மூலம் பல ஆராய்சிகளை மேற்க்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.