கேராளாவின் டூரிஸ்ட் ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான பாலக்காட்டின் அன்னக்கலில் புதுவகை மரப்பல்லி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்
பாலக்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த குட்டையின மரப்பல்லிக்கு Palakkad Dwarf Gecko அல்லது Cnemaspis Palakkadensis என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்
‘பல ஆண்டுகளாக இது ஏனோ ஹெர்பெட்டாலஜி குறித்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் படாமல் போயுள்ளது. இந்த மரப்பல்லி பார்ப்பதற்கு அசப்பில் Littoralis என்ற இனத்தை சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்ற யூகத்தினால் கூட விடுபட்டு போயிருக்கலாம். மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் இது வேறுவகையானது என்பதை அறிந்து கொண்டோம்.
ஊர்வன குறித்து கடந்த ஆண்டு பாலக்காடு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது இதை கண்டோம். இந்தியாவில் கணடெடுக்கப்பட்டுள்ள மரப்பல்லிகளில் இது 43வதாக இணைந்துள்ளது. சராசரியாக 32.2 மில்லி மீட்டர் அளவில் இந்த பல்லி இருக்கும்’ என தெரிவித்துள்ளார் விஞ்ஞானி அமித் சயத்.