இறந்த பைனரி நட்சத்திரத்தில் ஒன்று அதிவேகமாக சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
விஞ்ஞானிகள் சமீபத்தில் இறந்த பைனரி நட்சத்திரங்களில் ஒன்றான நியூட்ரான் நட்சத்திரம் ஒரு வினாடிக்கு 716 சுழற்சிகளில் சுழல்வதைக் கண்டுபிடித்துள்ளனர். இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வேகமாக சுழலும் நட்சத்திரங்களில் இது முக்கியமானதாகும்.
இந்த நியூட்ரான் நட்சத்திரம், பைனரி சிஸ்டம் 4U 1820-30 இல் NGC 6624 என்ற குளோபுலர் கிளஸ்டருக்குள் உள்ளது. இந்த பைனரி நட்சத்திரமானது இது பூமியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
(ISS) சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள நாசாவின் எக்ஸ்ரே தொலைநோக்கி தனது நியூட்ரான் ஸ்டார் இன்டீரியர் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரரை ( NICER ) பயன்படுத்தி இதை கண்டுபிடித்தது. இது மட்டுமின்றி, நியூட்ரான் நட்சத்திரத்தின் மேற்பரப்பிலும் அணு குண்டுகளை வெடிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த வெடிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த வெடிப்புகளின் போது, நியூட்ரான் நட்சத்திரம் சூரியனை விட 1,00,000 மடங்கு பிரகாசமாகி, அபரிமிதமான ஆற்றலை வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நியூட்ரான் நட்சத்திரங்களின் தீவிர பண்புகள்
பைனரி நட்சத்திரங்களான நியூட்ரான் நட்சத்திரங்கள், அணு எரிபொருளை எரித்து தீர்ந்துவிட்ட பிறகு இறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இத்தகைய இறந்த நட்சத்திரங்கள் தீவிர அடர்த்தி மற்றும் விரைவான சுழற்சிகளுக்கு பெயர் பெற்றவை. இத்தகைய இறந்த நட்சத்திரம் சூப்பர் நோவாக மாறும் பொழுது அதன் மையமானது தனது சொந்த புவியீர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டு சுமார் 20 கிலோமீட்டர் விட்டம் வரை சுறுங்கி ஒடுங்குகி சிறியதாகும்.
இருப்பினும் நமது சூரியனை விட குறைந்தது 8 மடங்கு நிறை கொண்ட மிகப் பெரிய நட்சத்திரங்களாக இருக்கிறது. அப்படி ஒடுங்கும் பொழுது இத்தகைய நட்சத்திரம் நம்பமுடியாத வேகத்தில் சுழலும், அப்படி சுழலும் பொழுது அருகில் இருக்கும் பைனரி நட்சத்திரமான (வெள்ளை குள்ளன்) துணை நட்சத்திரங்களிலிருந்து சக்தியைப்பெற்று மேலும் அதிவேகமாக சுழலும் .