சர்வம் இணைய மயம் என்றாகிவிட்டச் சூழலில், ஸ்மார்ட்போன்களில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், 85 லட்சம் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பு குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெஸ்கே லேப், மொபைல் வைராலஜி என்ற பெயரில் ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதில், கடந்த 2016ம் ஆண்டிலும் அதற்கும் முன்பும் கண்டறியப்பட்ட ஸ்மார்ட்போன் வைரஸ்களை விட, மும்மடங்கு அதிக வைரஸ்கள் அடையாளம் கானப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 2016ம் ஆண்டில் 50 சதவீத வைரஸ்கள் புதிதாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள பக்கங்களில் விளம்பரங்கள் வாயிலாகவும், ட்ரோஜன் எனப்படும் வைரஸ்களாகவும் இவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வாயிலாக ஸ்மார்ட் போன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ட்ரோஜன் வைரஸ்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை தானாகே தரவிறக்கம் செய்யும் அபாயமும் இருப்பதாக, அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ட்ரோஜன்களிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
* சரியான இடைவெளியில் ஸ்மார்ட்போன்களின் ஓஎஸ் எனப்படும் இயங்குதளத்தை அப்டேட் செய்யுங்கள்.
* பாதுகாப்பற்ற இணைய தளங்களைத் தவிர்க்கலாம்.
* ட்ரோஜன்களைக் கண்டறிந்து அகற்ற ஆன்டி-வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.
* இ -மெயிலில் வரும் பாதுகாப்பற்ற இணைய பக்கங்கங்களின் லிங்குகளை, கண்ணை மூடிக்கொண்டு டெலீட் செய்து விடுங்கள்.