டெக்

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வரும் ஆண்டு முதல் 5ஜி சேவை

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வரும் ஆண்டு முதல் 5ஜி சேவை

Veeramani

செல்போன் சேவை நிறுவனங்கள் சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள தொலைத்தொடர்புத்துறை, இந்த நகரங்களில வரும் ஆண்டில் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என தொலைத்தொடர்புதுறையின் ஆண்டு இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை, சந்திகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத் ஐதராபாத், லக்னோ, புனே, காந்திநாகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை வெள்ளோட்டத்திற்கான மையங்களை தயாராக வைத்திருப்பதாகவும் இந்த நகரங்களில் 5 ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொலைதொடர்புதுறை நேரடி அன்னிய முதலீடு 150 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு தொலைத்தொடர்புத்துறையால் சுமார் 224 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை படுகை திட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.