இன்றைய டிஜிட்டல் உலகில் ‘இன்டர்நெட்’ உலக மக்கள் அனைவரையும் இணைப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் நொடிக்கு 319 டெராபைட் என்ற வேகத்தில் இண்டர்நெட்டை இயக்கி சாதித்துள்ளனர் ஜப்பான் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள்.
ஜப்பான் நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த மைல்கல்லை அண்மையில் எட்டியிருந்தனர். இதற்கு முன்னதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 178 டெராபைட் வேகத்தில் இன்டர்நெட்டை இயக்கியது அதிவேக சாதனையாக இருந்தது.
ஒரு டெராபைட் 1000 ஜிகாபைட்டுக்கு நிகராகும். பெரும்பாலான வீடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்புகள் Mbps இணைப்பில் இயங்கி வருகின்றன. இந்த 319 டெராபைட் வேகத்தின் மூலம் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் அந்த கண்டெண்ட் நொடி பொழுதில் டவுன்லோடாகி விடும்.
இப்போதைக்கு தென் கொரியா, சிங்கப்பூர் மாதிரியான நாடுகள் இணைய வேகத்தில் உலக அளவில் முதல் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.