டெக்

போன் நம்பர் இல்லாமலேயே ஈசியா பணம் அனுப்ப முடியும்.. எப்படி தெரியுமா?

போன் நம்பர் இல்லாமலேயே ஈசியா பணம் அனுப்ப முடியும்.. எப்படி தெரியுமா?

JananiGovindhan

ஷாப்பிங் மால், தியேட்டர் என பெரிய வணிக வளாகங்கள் தொடங்கி சிறு, குறு கடைகள் வரை மக்களிடையே மிகப்பெரிய தேவையாகவே அமைந்திருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை.

கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல டிஜிட்டல் முறை பரிவர்த்தனை அப்ளிகேஷனை வைத்து UPI மூலம் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடைக்கோடி மக்கள் வரை இந்த ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை நித்தமும் பயன்படுத்துவதால் சுலபமாக உபயோக்கிக்கும் வகையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் சார்பில் தொடர்ந்து முக்கிய அம்சங்களை கொண்ட அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், UPI மூலமும், கூகுள் பே, போன் பே மூலமும் தினந்தோறும் பயன்படுத்துவோருக்கு இந்த முக்கியமான அம்சங்கள் கண்டிப்பாக உதவும். அதன்படி, ஒருவரிடம் இருந்து QR Code அனுப்பி பணத்தை வேறு எப்படியெல்லாம் பணத்தை பெறலாம், போன் நம்பரே கொடுக்காமல் எப்படி பணம் பெறுவது என்பதை பார்க்கலாம்.

1) கூகுள் பே-ல் QR Code மூலம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். அதற்கு GPay Profile-ல் QR Code-க்குள் சென்றால் அதில் வலப்புறத்தின் மேலே உள்ள ஐகானில் Set amount என இருக்கும். அதில் எவ்வளவு பணம் வேண்டுமோ அதனை செட் செய்து அதற்கான QR Code மட்டும் அனுப்ப முடியும். இதன் மூலம் தவறுதலாக கூடுதல் பணம் அனுப்புவதை தவிர்க்க முடியும்.

2) எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளிலும் எத்தனை அக்கவுன்ட் வைத்திருந்தாலும் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் UPI ID இருக்கும். இந்த UPI ID-ஐ வைத்து பேமெண்ட் அனுப்பச் சொல்ல முடியும். இதனை பயன்படுத்துவதால் போன் நம்பர் கொடுத்தாக வேண்டிய அவசியமோ அல்லது QR Code அனுப்ப வேண்டிய அவசியமோ இருக்காது.

3) True caller இல்லாதவர்கள் தங்களுக்கு தெரியாதவர்கள் எவரேனும் போன் செய்தால் அந்த நம்பரை காப்பி செய்து கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளில் பேஸ்ட் செய்து யார் அந்த நபர் என்பதை ஃபோட்டோவோடு பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் இதில் முக்கியமான ஒன்று அந்த நபர் கூகுள் பே போன்ற செயலிகளில் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.