கார் தயாரிப்பு தொழிற்சாலை pt web
டெக்

கார் வாங்குவோர் கவனத்திற்கு.. நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு..

PT WEB

15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான கொள்கை கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் வாங்குபவர்கள் தங்களின் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய ஊக்குவிப்பதற்காக, தள்ளுபடி வழங்குமாறு வாகன தயாரிப்பு நிறுவனங்களை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பாரத் மண்டபத்தில் வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாமின் உறுப்பினர்களுடன் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்குவதாக Mercedes Benz India அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்தரா அண்டு மஹிந்தரா, ஹூண்டாய் மோட்டார், கியா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர், ஹோண்டா கார்ஸ், நிசான் இந்தியா, ஜே.எஸ்.டபள்யூ. எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களும் பழைய கார்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு 1.5 சதவிகிதம் அல்லது 20 ஆயிரம் ரூபாய் இதில், எது குறைவோ அதனை சலுகையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.

மேலும், கடந்த 6 மாதங்களில் தங்களின் காரை ஸ்கிராப் செய்த உரிமையாளர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்து சலுகையை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 3 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளன.