உலகம் முழுவதும் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் செயலிழந்ததால், அதன் பயனாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
DNS என்றழைக்கப்படும் DOMAIN பெயர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இணையதளங்களும், செயலிகளும் செயலிழந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்தியாவில் செயல்படும் சொமேட்டோ, பேடிஎம், அமேசான் செயலி பயனாளர்கள், மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
அதேபோல, AIRBNB, UPS, HSBC வங்கி, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்ட இணையதளங்களும் முடங்கின. சில மணி நேரங்களுக்குப் பின் இணையதளங்கள் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் இணையதளங்கள் முடங்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.