டெக்

256 ஜிபி நினைவுத் திறனுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5

webteam

சீன நிறுவனமான ஒன்பிளஸ், தனது அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனை 256 ஜிபி நினைவுத் திறன் கொண்டதாக வடிவமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 3டி உள்ளிட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில் அடுத்த பதிப்பாக 5 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் 4 என்ற எண் அதிர்ஷ்டமில்லாத எண்ணாகக் கருதப்படுவதால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதில், கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே எனப்படும் வளைந்த திரையுடன் வடிவமைக்கப்பட உள்ள ஒன்பிளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன்கள், வியக்கத்தக்க அளவில் 256 ஜிபி நினைவுத் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. செல்ஃபி பிரியர்களை கவரும் வகையில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா மற்றும் 23 மெகாபிக்சல் பின்பக்க கேமிரா இதில் இடம் பெறும் எனவும் தெரிகிறது. அதேபோல, ஸ்மார்ட்போனின் வேகத்தைக் கணக்கில் கொண்டு ஸ்நாப்டிராகன் 835 புராசசருடன் ஒன்பிளஸ் 5 வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.