டெக்

100 புதிய கிரகங்கள்: நாசா கண்டுப்பிடிப்பு

100 புதிய கிரகங்கள்: நாசா கண்டுப்பிடிப்பு

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவில் நாசா மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க கடந்த 2009-ம் ஆண்டு கெப்லர் என்கிற விண்கலத்தை அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுப்பிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அவ்வாறு கிடைத்த புகைப்படங்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 'கே 2 மிஷின்' என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 300 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில்தான் 149 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 100 புதிய கிரகங்களாகும். டென்மார்க்கை சேர்ந்த டெக்னிக்கல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் 275 பேர் குழுவாக இணைந்து ஆராய்ச்சி செய்து இதனை கண்டறிந்துள்ளனர். சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கிரகங்கள் பூமி அளவில் உள்ளது. அதே நேரத்தில் வியாழன் போன்று பெரிய கிரகங்களும் அதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.