டெக்

2020க்குப் பிறகு 3‌ஜி சேவை இருக்காது: ஏர்டெல்

2020க்குப் பிறகு 3‌ஜி சேவை இருக்காது: ஏர்டெல்

webteam

நாட்டின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3ஜி சேவை நிறுத்தப்படும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. முதல் நடவடிக்கையாக கொல்கத்தாவில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெலின் இந்த நடவடிக்கையால் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் 3ஜி சேவைக்கு பயன்படுத்தப்படும் 900 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை 4ஜி சேவைக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் 2ஜி சேவை தொடரும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது‌. முன்னதாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 2 ஆயிரத்து 866 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.