முகமது சலீம், ஜாபர் சாதிக் pt web
தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் மனு - நீதிமன்றம் புதிய உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சகோதரர் முகம்மது சலீம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து கடந்த ஜூன் 26 தேதி அவரை கைது செய்த நிலையில், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

Madras High Court

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகம்மது சலீம், ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட என்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

court order

இந்த வழக்கு 13 ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அமலாக்கதுறை நவம்பர் 22 தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.