சமூகவலைதளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் தனது யூடியூப் சேனல் மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துகளையும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் பேசிவருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய கோரி பலரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யபட்டுள்ளார்.
மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரிதாசை கைது செய்யக்கூடாது என போலீசாரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு மாரிதாசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.