தமிழ்நாடு

போலியான பொருட்களை விற்பனை செய்த வடமாநில இளைஞர்: போலீசார் விசாரணை

போலியான பொருட்களை விற்பனை செய்த வடமாநில இளைஞர்: போலீசார் விசாரணை

kaleelrahman

கோபிசெட்டிபாளையத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி செல்போன் பொருட்களை விற்பனை செய்த வடமாநில இளைஞர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட புளூடூத், இயர்போன், பவர் பேங்க் போன்றவற்றை சிலர் விற்பனை செய்து வந்தனர். இதனால் செல்போன. கடைகளில் விற்பனை பாதித்ததோடு, தரமற்ற போலியான பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் சாலையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் வடமாநில இளைஞர் ஒருவர் போலியான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கோபிசெட்டி பாளையத்தில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கும்பலாக ஈரோடு வந்த அவர்கள் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் போலி பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரையும் போலி பொருட்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.