accused pt desk
தமிழ்நாடு

தஞ்சை: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

17 வயது சிறுமியை காதலித்து அவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட இளைஞருக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (23). இவர், கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோது, 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

court building

இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.சுந்தர்ராஜன், பிரவீன் குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.