தமிழ்நாடு

அரசு பேருந்து மோதி இளைஞர் பலி - ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் தலைநசுங்கிய பரிதாபம்!

அரசு பேருந்து மோதி இளைஞர் பலி - ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் தலைநசுங்கிய பரிதாபம்!

webteam

பூந்தமல்லி அருகே அரசு பஸ் மோதி மருந்தக ஊழியர் பலியானார். ஹெல்மெட் அணிந்திருந்த போதும் தலை நசுங்கி உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம். 24 வயதான அவர் தனியார் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று மதியம் வேலை விஷயமாக பூந்தமல்லி நோக்கி மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலையில் சாம் சென்று கொண்டிருந்தார். அவர் பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சைதாப்பேட்டையில் இருந்து நேமம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, முன்னாள் சென்ற சாம்-இன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாம் மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சோகம் என்னவென்றால் உயிர்காக்கும் தலைக்கவசத்தை சாம் அணிந்திருந்த போதும், அவர் தலைநசுங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் மோகன் என்பவரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.