கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி ஆன்லைனில் நூதன மோசடிகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இளைஞரான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவர்ச்சிகரமான சலுகையில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக கிடைத்துள்ளது என குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கார் பரிசாக பெறுவதற்கு 10% தொகையை எங்களது வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட வங்கி எண்ணை வழங்கி உடனடியாக இந்த வங்கியில் குறிப்பிட்ட தொகையை உடனே செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுதாரித்துக் கொண்ட இளையராஜா இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இது போன்ற கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கி அதில் மயங்கிய பலரும் உடனடியாக அவர்கள் கொடுக்கும் அந்த வங்கி எண்ணில் தொகையை டெபாசிட் செய்து கடைசியாக ஏமாந்து வருகிறார்கள். இதுப்போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.