தமிழ்நாடு

போலீஸ் ஆக ஆசைப்பட்டு கிரிமினல் வேலை செய்த இளைஞர்..!

போலீஸ் ஆக ஆசைப்பட்டு கிரிமினல் வேலை செய்த இளைஞர்..!

webteam

சேலத்தில் நடந்த காவலர்களுக்கான உடற்தகுதி சுற்றில் தலையில் சுவிங்கம் ஒட்டிவந்த இளைஞர் சிக்கினார்.

சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றில் காலியாக உள்ள பணிகளுக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்விற்கு வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தயாநிதி (22) என்பவர் முறைகேடு செய்ததாக வெளியேற்றப்பட்டார். அவர் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவில், தனது உயரத்தை கூட்டி காட்டுவதற்காக முறைகேடு செய்ததாக தெரியவந்துள்ளது. 

காவலர் உடற்தகுதி தேர்வில் உயரம் 170 செண்டி மீட்டர் இருக்க வேண்டும், ஆனால் தயாநிதி 169 செண்டி மீட்டர் தான் இருக்கிறார். இதனால் தனது தலை முடிக்குள் சுவிங்கத்தை ஒட்டி முறைகேடு செய்து, ஒரு செண்டி மீட்டர் உயரத்தை அதிகரித்துக்காட்ட நினைத்தார். ஆனால் அங்கு தேர்வுப் பணியில் இருந்த போலீஸ் உயரதிகாரிகள் சிலர் அவரது முறைகேடை கண்டறிந்தனர். இதனால் தயாநிதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.