சென்னை குன்றத்தூரில் காணாமல் போன சிறுவன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு கால் சட்டையுடன் சென்ற சிறுவன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, 'பீச்' சிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளான். இதனை கண்ட நடத்துனர், சிறுவனை அழைத்துக் கொண்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
சிறுவனிடம் விசாரணை நடத்திய நிலையில், தாய் பெயர் திவ்யா என்பதை மட்டுமே கூறி வந்துள்ளான். அப்போது, வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் நபர் ஒருவர், அவ்வழியாக சென்றுள்ளார். சிறுவனைக் கண்டதும் அடையாளம் தெரிந்துகொண்ட அந்த நபர், அவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உதவினார். பின்னர் காவல்துறையினர் பத்திரமாக அச்சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.