சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த இளைஞரை பெண் காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்தனர். அப்போது, கல்லறை தோட்டத்தில் உதயா என்ற இளைஞர் சுய நினைவின்றி மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனையறிந்த டிபிசத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அந்த இளைஞரை தனது தோளில் சுமந்து கொண்டு ஆட்டோ ஒன்றில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மனிதநேயமிக்க இச்செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, டிபிசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.