தமிழ்நாடு

4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன்? காதலி எடுத்த விபரீத முடிவு!

4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன்? காதலி எடுத்த விபரீத முடிவு!

webteam

ஆம்பூரில் 4 ஆண்டுகளாக காதலித்து, காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்-மரியா தம்பதியினர். இவர்களது மகள் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்தார்.

இவரும் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பரத், ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாய்ஸ் பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனது மகளை 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் பரத் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஜாய்ஸ் பிரியாவின் தந்தை பன்னீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், தலைமறைவான பரத்தை தேடி வருகின்றனர்.