தமிழ்நாடு

ஆகஸ்ட் 20 வரை அரசு ஐடிஐக்களில் சேர விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் 

ஆகஸ்ட் 20 வரை அரசு ஐடிஐக்களில் சேர விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் 

webteam

அரசு ஐடிஐக்களில் சேர ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், ஆர்.கே.நகர், கிண்டி(மகளிர்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 

அரசு ஐடிஐயில் சேர விரும்பும் மாணவர்கள் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தொழிற்பிரிவுகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒரு மாணவர் விருப்பமுள்ள மாவட்டங்களில் உள்ள ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம். 

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.