தமிழ்நாடு

நேற்றைய டாஸ்மாக் வருமானம் எவ்வளவு தெரியுமா?

நேற்றைய டாஸ்மாக் வருமானம் எவ்வளவு தெரியுமா?

webteam

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேற்றைய வருவாய் 133.1 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழக்த்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் நேற்று முன் தினம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று முன் தினம் மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது.

இந்நிலையில், நேற்றைய டாஸ்மாக் வருமானம் 133 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வருமானத்தை காட்டிலும் 30 கோடி குறைந்து காணப்படுகிறது.

சென்னை - 5.6 கோடி

திருச்சி - 32.5 கோடி

மதுரை - 34.8 கோடி

சேலம் - 29.6 கோடி

கோவை - 30.6 கோடி

நேற்றைய வருவாய் - 133.1 கோடி ரூபாய்