மஞ்சள் எச்சரிக்கை முகநூல்
தமிழ்நாடு

தமிழக மக்களே உஷார்... ஒரே நேரத்தில் இரு எச்சரிக்கை!

தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் மழை மற்றும் வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: வேதவள்ளி

கோடை காலத்தை பொறுத்தவரை காலை நேரத்தில் வெப்பம் அதிகரித்தும், மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தும் காணப்படும். இம்மாதிரியான நேரங்களில் மழை மற்றும் வெயிலுக்கான எச்சரிக்கை விடப்படும். இதில், நாம் குறிப்பிட்டு பார்க்க வேண்டியது வெயிலின் தாக்கம்.

புவி வெப்பமயமாதல்

அந்தவகையில், இன்றுமுதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை விசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும். மேலும், ஒரு சில இடங்களில் மிதமான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் வெப்பம் மற்றும் மழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடல் காற்று உள்ளே வரும் என்பதால் மற்ற உள்மாவட்டங்களை காட்டிலும் வெப்பநிலை குறைவாகதான் அமைவது வழக்கம். ஆனால், இன்று (01.5.2024) காலை 8.55 மணி அளவில் கிட்டதட்ட 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைக்கு பதிவான வெப்பத்தின் அளவு குறித்த தகவல்கள் வானிலை ஆய்வு மையத்தால் இன்று மாலை வெளியிடப்படும் என்பது கூடுதல் தகவல்.