விடைத்தாள் மறுமதிப்பீடு புதிய தலைமுறை
தமிழ்நாடு

வெளியானது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விடைத்தாள் மறுமதிப்பீடு, நகல் பெறுவது எப்படி?

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது .

PT WEB

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது .

பொதுத்தேர்வு மதிப்பெண்கள் குறித்து சந்தேகிக்கும் மாணவர்கள், விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் நகல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மதிப்பெண் பட்டியலை வரும் 9ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறியுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இன்று காலை 11 முதல், 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் கட்டணம். மறுக்கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும் பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் போது, ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.