குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் இசை முழக்க போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், அதன் ஒருபகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒரு நாள் இசை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கலந்துகொண்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.