சென்னை திரையரங்குகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

உதயம் Theatre பெயர்க்காரணம் இதுவா? ஒரே ஏரியால 25 தியேட்டரா!-சுவாரஸ்யம் பகிரும் எழுத்தாளர் தமிழ்மகன்!

சென்னையில் இருந்த தியேட்டர்களின் சுவாரஸ்யங்கள் குறித்து எழுத்தாளர் தமிழ்மகன் சொல்வதை இந்த வீடியோவில் அறியலாம்.

Prakash J

நவீன உலகில் தொழில்நுட்பம் பெருகிவருவதால் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அது, திரைத்துறையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சில திரையரங்குகள் ஈடுகொடுக்க முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. மேலும், ஓடிடி தளங்கள், இணையத்தில் புதுப்படங்கள் கசிவு ஆகியவற்றின் பாதிப்பாலும் திரையரங்குகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல திரையரங்குகள் வணிகவளாங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.

அந்த வகையில் சென்னை அசோக் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ‘உதயம்’ திரையரங்க வளாகமும் ஒன்று. இங்கு உதயம், சூரியன், சந்திரன் ஆகிய பெரிய திரைகளுடன் மினி உதயம் என்ற சின்ன தியேட்டரும் இயங்கிவந்தது. தற்போது இந்த தியேட்டர் வளாகமும் மூடுவிழா கண்டுள்ளது. இந்த தியேட்டர் வளாகம் இடிக்கப்பட்டு, அங்கே பல மாடிகள் கொண்ட அடுக்குக் குடியிருப்புகள் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உதயம் தியேட்டர் இடிப்பு குறித்து பலரும் தங்களுடைய நினைவலைகளைப் பகிர்ந்துவரும் வேளையில், அதன் பெயர்க்காரணம் குறித்தும், ஒருகாலத்தில் சென்னையில் மட்டும் பல இடங்களில் ஆக்கிரமித்திருந்த தியேட்டர்களின் பட்டியல்கள் குறித்தும் அதன் சுவாரஸ்யங்கள் குறித்தும் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான தமிழ்மகன், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவுக்காகப் பிரத்யேகமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். டிஜிட்டர் பிரிவு எடிட்டர் பரிசல் கிருஷ்ணாவுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய நேர்காணலை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அவர் பகிர்ந்துகொண்ட அந்தச் சுவையான கருத்துகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கவும்.