தமிழ்நாடு

உலக முட்டை தினம் : 20 ஆயிரம் முட்டைகள் இலவசம்

உலக முட்டை தினம் : 20 ஆயிரம் முட்டைகள் இலவசம்

webteam

நாமக்கலில் உலக முட்டை தினத்தை முன்னிட்டு கோழி பண்ணையாளர்கள் தரப்பில் 20 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கலில் கோழி பண்ணையாளர்கள் தரப்பில், முட்டை உட்கொள்ளுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் கால்நடை அரசு மருத்துவமனை டீன்  பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். பேரணியின் போது முட்டை உட்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கோழி பண்ணையாளர்கள் தரப்பில் பொதுமக்களுக்கு 20 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.  

இப்பேரணியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கோழிப்பண்ணையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.