தமிழ்நாடு

வலிப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி - பெண் காவலருக்கு மக்கள் பாராட்டு

வலிப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி - பெண் காவலருக்கு மக்கள் பாராட்டு

webteam

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்த‌ர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அத்திவரதர்‌‌‌ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான ‌பக்தர்‌கள்‌‌‌ அத்திவ‌‌ரதரை தரிசிக்க வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 12 நாட்களில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் வருகை காரணமாக நேற்று சில மணிநேரம் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர். விடுமுறை நாள் என்பதால், காஞ்சிபுரத்தில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், பக்தர் ஒருவர் கோயிலுக்கு வந்துள்ளார். வளாகத்தில் நின்ற அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் தீபா என்பவர், வலிப்பு வந்தவரின் முகத்தில் தண்ணீர் அடித்து முகத்தை துடைத்து விட்டார். பின்னர், அவருக்கு விசிறி விட்டும், தண்ணீர் கொடுத்தும் முதலுதவி செய்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்‌‌‌. இந்நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.