திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மாராடிப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்திருக்கிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஒரு நாள் முழுவதுமாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் புவனேஸ்வரியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.