தமிழ்நாடு

கன்றுக்குட்டியை தேடிச் சென்ற பெண் யானை மிதித்து உயிரிழப்பு

கன்றுக்குட்டியை தேடிச் சென்ற பெண் யானை மிதித்து உயிரிழப்பு

webteam

ஓசூர் அருகே காட்டு யானை மிதித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்தச் சூழலில் ஏணிபண்டா பகுதியை சேர்ந்த சின்னம்மாள் என்பவர் இருந்து நேற்று காட்டுப் பகுதியில் மாடுகளை மேய்த்துள்ளார். அப்போது கன்றுக்குட்டி வராததைக் கண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு அவர் தேடி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் வெகு நேரமாகியும் சின்னம்மாள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியில் பெண் உடல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது யானை மிதித்து சின்னம்மா உயிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்ட வனத்துறை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏணிபண்டா, குந்துக்கோட்டை, சிவனப்பள்ளி, வண்ணாத்திப்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.