கைது செய்யப்பட்ட குமுதவல்லி  PT WEB
தமிழ்நாடு

சீர்காழி | 3000 மதுபாட்டில்களை பதுக்கி வைத்த பெண் கைது; அதிர்ச்சியில் உறைந்த போலீசார்- என்ன நடந்தது?

சீர்காழியில் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாகத் தேர்தல் பறக்கும் படையினர் பல குழுக்களாக பிரிந்து பணிசெய்து வருகின்றனர். ஆங்காங்கே இந்தக் குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

மதுபாட்டிகல்கள்

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் விரைந்து சென்று, அந்த கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குமுதவல்லி என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் சாக்கு மூட்டைகள் மற்றும் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த குமுதவள்ளி என்ற பெண்ணை கைது செய்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் இருந்த, மது பாட்டில்கள் தேர்தலுக்காகக் கடத்திவரப்பட்டதா? அல்லது எதற்காகக் கடத்தி வரப்பட்டது? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்களின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் இருக்கும் போலீசார் தரப்பில் எனக் கூறப்படுகிறது.