சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஓநாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அதனை இனிமேல் சுற்றுலாப் பயணிகளும் பார்த்து மகிழலாம்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளும், வெள்ளை மயில் உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களும் உள்ளன. இதனை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஓநாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் 4 குட்டிகள் ஆண் குட்டிகளாகும். ஒரு குட்டி பெண் குட்டியாகும். வண்டலூர் பூங்காவில் ஓநாய் குட்டியை ஈன்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும். பாதுகாப்பாக மறைவிடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஓநாய் குட்டிகள் இன்று ஓநாய் முற்றத்தில் விடப்பட்டுள்ளது. இதனை இனி பார்வையாளர்களும் கண்டு மகிழலாம்.