வளர்ப்பு நாய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

இது இல்லாட்டி pet வச்சிக்க முடியாது... சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு

செல்லப்பிராணிகளை வளர்க்க முறையான உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்தி இருக்கிறது. மேலும் கடந்தவாரம் 953 பேருக்கு உரிமம் வழங்கி இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

தடை செய்யப்பட்ட ராட்வைலட் நாய் ஒன்று, கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது குழந்தையை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் வீட்டில் செல்லப்பிராணியை வளர்க்கும் நபர் முறையாக உரிமம் பெற்றிருக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. இதில் சிலர் செல்லப்பிராணியை உரிமம் இல்லாமல் வளர்ப்பது தெரியவந்தது.

சிறுமியை கடித்த Rottweiler வகை நாய்

நாய் வளர்க்கும் உரிமையாளருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செல்லப்பிராணியை வளர்ப்பது அவசியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

உரிமம் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற நினைப்பவர்கள், நாய் பற்றிய விவரம், புகைப்படம், ரேபிஸ்ட் தடுப்பூசி போடப்பட்ட விவரம் போன்றவை வைத்து விண்ணப்பம் செய்யவேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் கடந்த வாரத்தில் மட்டும் 953 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2300 விண்ணப்பம் செய்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.