வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க, ம.தி.மு.க, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, ம.ம.க உள்ளிட்டவை ஆதரவளித்த நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க எதிர்ப்புதெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வேல்முருகன், ஜவாஹிருல்லா கோரிக்கையை ஏற்று இந்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார்.